டெல்லி: மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், “ஐட்டம்” என்று கருத்து தெரிவித்த நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், “சிவராஜ் சிங் சௌகானின் அரசு, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்ததை நாடே அறியும்.
தற்போது அவர்களிடம் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தோல்வியடையும் நிலையில் உள்ளனர். ஆதலால் பாஜக முதலைக் கண்ணீர் வடிக்கிறது. அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்புகிறது.
குவாலியர் மாவட்டம் தப்ராவில் பட்டியலினத்தைச் சேர்ந்த இமார்த்தி தேவி பாஜக சார்பில் தேர்தலை சந்திக்கிறார். இவர் ஏறக்குறைய 23 ஆண்டுகள் காங்கிரஸில் உறுப்பினராக இருந்தார். இந்நிலையில், மார்ச் மாதம் பாஜகவில் இணைந்தார்.
முன்னதாக கமல்நாத்தை நீக்க வேண்டும் என்று சிவராஜ் சிங் சௌகான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். இது குறித்து பதிலளித்த சுப்ரியா, “சிவராஜ் சிங் சௌகானுக்கு பெண்கள் மீது அக்கறை இருந்தால், முதலில் சொந்த மாநிலத்தில் பெண்களுக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யப்பட்டும்” என்றார்.
இது குறித்து கமல்நாத் கூறுகையில், “நான் எந்தப் பெண்ணையும் அவமதிக்கவில்லை. ஐட்டம் நம்பர் 1, ஐட்டம் நம்பர் 2 என்பது எப்படி பெண்களை அவமதிப்பது ஆகும்” என்றார். நான் யாரையும் இழிவுப்படுத்த கூறவில்லை. உண்மையை பேசினேன்” என்றார்.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேசம் போன்று மண்ணின் மைந்தர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் - ராமதாஸ் ட்வீட்