17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகக்கூட ஆக முடியாத அளவுக்கு படுதோல்வி அடைந்துள்ளது.
குறைந்தபட்சம் 55 எம்பிக்களை பெறாத காங்கிரஸ் கட்சி, மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை மீண்டும் இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சி வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளதால், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தால், எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்ற கருத்து நிலவி வந்தது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்தார்.