ETV Bharat / bharat

பஞ்சாப்பில் விஸ்வரூபம் எடுக்கும் போதைப் பொருள் விவகாரம் - பஞ்சாபில் விஸ்வரூபம் எடுக்கும் போதைப் பொருள் விவகாரம்

டெல்லி: சட்ட விரோத போதைப் பொருள் விற்பனை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரதாப் சிங் பாஜ்வா தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள்
போதைப் பொருள்
author img

By

Published : Mar 5, 2020, 11:07 PM IST

Updated : Mar 5, 2020, 11:25 PM IST

பஞ்சாப்பில் சட்ட விரோத போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளத்தின் ஆட்சி நடைபெற்றபோது, போதைப் பொருள் கடத்தல் அதிகரித்ததாகவும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அலுவலர்கள் அதில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்க காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. இதையடுத்து, சட்ட விரோத போதை பொருள் விற்பனை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்தது.

கடிதம்
கடிதம்

இதனிடையே, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு காங்கிரஸ் எம்பி பிரதாப் சிங் பாஜ்வா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "சட்ட விரோத போதை பொருள் விற்பனை குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை சரியாக நடத்தப்படவில்லை. எனவே, மத்திய அரசு இதில் தலையிட வேண்டும். விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மத்திய அரசும் மாநில அரசும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. மூத்த அரசு அலுவலர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதம்
கடிதம்

இதையும் படிங்க: டெல்லி வன்முறை: அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை

Last Updated : Mar 5, 2020, 11:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.