கர்நாடகாவில் 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க பெரும்பான்மையான எண்ணிக்கை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி கூட்டணி அமைத்து ஒரு வருடமாக ஆட்சி நடத்தி வருகிறது.
இந்த ஒரு வருடத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பரஸ்பரமாக, ஒருவரைக்கொருவர் விமர்சித்து வருகின்றனர். இதனால் கூட்டணி ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், விஜயநகர் சட்டப்பேரவை உறுப்பினர் அனந்த் சிங், தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, அந்த கடிதத்தை சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமாரிடம் அளித்ததாக தகவல் வெளியானது.
இதனை மறுத்துள்ள சபாநாயகர் கே.ஆர். ரமேஷ், "யாரும் என்னை சந்திக்கவில்லை. 20 உறுப்பினர்கள் என்னை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தாலும் அதனை நான் ஏற்பேன். ஆனால் இதுவரை என்னை யாரும் சந்திக்கவில்லை" என்றார்.
மற்றொரு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ், தன் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.