புதுச்சேரி மாநிலம் பாகூர் அரசு சுகாதார நிலையத்தில் மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு, அவசர ஊர்தி இருந்தும் ஓட்டுநர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக பாகூர் மாதா கோயிலிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்பகுதியில் காவல் துறையின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காவல் துறையினர் போட்டிருந்த தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே நுழைய முயன்றபோது அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மருத்துவ அலுவலர்களிடம் எம்.எல்.ஏ. தனவேல் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: சிறுமியை வன்புணர்வு செய்த பாஜக முன்னாள் முதலமைச்சரின் உதவியாளர் கைது!