ETV Bharat / bharat

நாராயணசாமி மீண்டும் முதலமைச்சரானால் காங்கிரஸுக்குதான் வீழ்ச்சி - நாராயணசாமியால் காங்கிரஸ் கூடாரம் காலியாகும்

புதுச்சேரி: 2021ஆம் ஆண்டிலும் முதலமைச்சராக நாராயணசாமி நீடித்தால் காங்கிரஸ் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் தனபால் குற்றஞ்சாட்டினார்.

முதல்வரை சாடி பேசிய தனவேல்
முதல்வரை சாடி பேசிய தனவேல்
author img

By

Published : Jan 11, 2020, 3:02 PM IST

Updated : Jan 11, 2020, 4:24 PM IST

புதுச்சேரி பாகூர் சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர் தனவேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளும் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், எம்எல்ஏ தனவேல் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அதில், "புதுச்சேரியில் நடைபெறும் இந்த ஆட்சியில் ஊழல் பட்டியலை தயாரித்து வைத்துள்ளேன். இதனை கட்சி தலைமையிடம் கொடுப்பேன். காங்கிரஸ் கட்சியில் ஊழல்வாதிகள் இருப்பதால் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துவிட்டார். அப்படி ஒரு ஊழல்வாதி (நாராயணசாமி) புதுச்சேரியிலும் இருக்கிறார். 2021ஆம் ஆண்டு தேர்தலிலும் நாராயணசாமி முதலமைச்சராக நீடித்தால் காங்கிரஸ் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும்.

முதலமைச்சரை சாடிய தனவேல்

இந்த ஆட்சியிலுள்ள அனைத்து அமைச்சர்களும் நில மோசடியில் ஈடுபடுகின்றனர். புதுச்சேரியில் தனியார் ஜவுளிக்கடை திறக்க பல கோடி ரூபாய் கை மாறியுள்ளது" என்றார்.

Intro:
புதுச்சேரியில் முதல்வராக நாராயணசாமி நீடித்தால் 2021ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் பெரும் வீழ்ச்சியை பெரும் காங்கிரஸ் எம்எல்ஏ தனபால் தெரிவித்துள்ளார்

Body: புதுச்சேரியில் மோசமான ஆட்சி நடக்கிறது இதனை எதிர்த்து போராட்டங்கள் தொடர்ந்து நடத்துவதுவேன் எனவும் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேல் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார் வரும் சட்டமன்ற தேர்தலில் இதே முதல்வர் தொடர்ந்தால் புதுச்சேரி முன்னேற்றத்துக்கு வராது என்றும் அவர் குற்றம் சாட்டினார்

புதுச்சேரி பாகூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தனவேல் இவர் காங்கிரஸ் எம்எல்ஏ அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளும் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தினார் இந்நிலையில் இன்று செய்தியாளர்களை புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் சந்தித்தார் அப்போது பேசிய அவர்

புதுச்சேரியில் நடைபெறும் இந்த ஆட்சியில் ஊழல் பட்டியலை தயாரித்து வைத்துள்ளேன் இதனை கட்சி தலைமையிடம் கொடுப்பேன் காங்கிரஸ் கட்சியில் ஊழல் பெருச்சாளிகள் இருப்பதால் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்து ஓடிவிட்டார் அப்படி ஒரு ஊழல் பெருச்சாளி புதுச்சேரியில் இருக்கிறார் முதல்வராக நாராயணசாமி நீடித்தால் ,2021ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும்

இந்த ஆட்சியில் நில மோசடி நடக்கிறது அனைத்து அமைச்சர்களுக்கும் இதில் ஈடுபடுகிறார்கள் புதுச்சேரி தனியார் துணிக்கடை திறக்க பல கோடி ரூபாய் கை மாறி உள்ளது என்றும் தனவேல் எம்எல்ஏ பேட்டியில் தெரிவித்தார்

அரசு நிறுவன பெட்ரோல் பங்குகள் அமைச்சர்களின் கீழ் சென்று விட்டது புதுச்சேரி அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது இனி புதுச்சேரி தாங்காது கேசினோ வந்தால் புதுச்சேரி கலாச்சாரம் சீரழியும் விபச்சாரம் பெருகும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிக்கும் கேசினோ பெயரில் அணுகுண்டை முதல்வர் கொண்டு வந்து நிறுத்த இருக்கிறார் என்றும் தனவேல் எம்எல்ஏ செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்

Conclusion:புதுச்சேரியில் முதல்வராக நாராயணசாமி நீடித்தால் 2021ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் பெரும் வீழ்ச்சியை பெரும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ தனபால் தெரிவித்துள்ளார்

Last Updated : Jan 11, 2020, 4:24 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.