மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. இதுவரை ஐந்து கட்டங்களுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், டெல்லியில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான நிதின் கட்கரி, "பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளை சுற்றியே காங்கிரஸ் தேர்தல் களம் அமைத்திருக்க வேண்டும்.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை இழிவாகப் பேசி காங்கிரஸ் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது. காங்கிரசை சேர்ந்தவர்கள் பிரதமர் மோடியை 56 முறை இழிவாகப் பேசியுள்ளனர். காங்கிரசால் தேர்தல் பரப்புரைகள் மதிப்பிழந்து போனது" என குற்றம்சாட்டினார்.