ETV Bharat / bharat

போதைப்பொருள் பறிமுதல் வழக்கு: முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்

author img

By

Published : Jul 16, 2020, 9:37 AM IST

போதைப்பொருள் பறிமுதல் வழக்கு தொடர்பாக முதலமைச்சர் பைரன் சிங் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும் என மணிப்பூர் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஓக்ராம் ஐபோபி தெரிவித்துள்ளார்.

congress-demands-cm-biren-singhs-resignation-over-drug-seizure-case-in-manipur

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக பாஜகவைச் சேர்ந்த லுங்கோசெய் ஜோ என்பவரின் வீட்டிலிருந்து ரூ. 40 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்ததோடு, அவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏராளமான முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.

ஆனால் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு கண்காணிப்பாளர் தவினஜம் பிருந்தா மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமான பத்திரத்திற்கு பின், லுங்கோசெய் ஜோவுக்கு மூன்று வாரம் பிணை வழங்கப்பட்டது.

இதுகுறித்து மணிப்பூர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஓக்ராம் ஐபோபி பேசுகையில், ''கடந்த சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின்போதே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகள் பற்றி காங்கிரஸ் கட்சியினர் பேசினோம். முதலைமைச்சர் பைரன் சிங் தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கினை சிபிஐ போன்ற அதிகாரமிக்க அலுவலர்களால் விசாரிக்கப்பட வேண்டும்.

மாநில காவல் துறை அலுவலர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அரசுகளால் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை யார் விசாரிக்கவுள்ளார்கள் என்பதை அரசு தெளிவாக கூறவேண்டும்'' என்றார்.

இதற்கு பாஜக தரப்பில் பதிலளிக்கையில், ''நண்பர்கள், உறவினர்கள் என யாராக இருந்தாலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரும் நிச்சயம் தண்டனை அனுபவிப்பார்கள். நிச்சயம் இந்த விவகாரம் பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும்'' என்றார்.

இதையும் படிங்க: 50 நாள்களாக எரியும் அஸ்ஸாம் எண்ணெய்க் கிணறு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.