டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலில் மத்திய முன்னாள் அமைச்சர் கிருஷ்ண திரத், அர்விந்தர் லவ்லி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சிக்குத் தாவிய அல்கா லம்பா சாந்தினி சவுக் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். தேர்தல் பரப்புரைக் குழு தலைவர் கீர்த்தி ஆசாத்தின் மனைவி பூனம் ஆசாத், சங்கம் விஹார் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் டெல்லி அமைச்சர் அசோக் குமார் வாலியா, கிருஷ்ண நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். டெல்லி தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த வேட்பாளரையும் காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க: தமிழ்நாடு - கேரள எல்லையில் ரூ.50 லட்சம் சாராயம் பறிமுதல்!