கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள சூழலில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.
ஊரடங்கால் பொது போக்குவரத்து முடங்கியுள்ளதால், வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இதற்கு தீர்வுகாணும் வகையில் மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கினாலும் அதற்கு அதிகப்படியாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்த பலர், சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்வதும், அப்படி செல்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியிலிருந்து சொந்த மாநிலத்துக்கு நடை பயணமாக புறப்பட்ட தொழிலாளர்களை, சுக்தேவ் விஹார் மேம்பாலம் அருகே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
இதையடுத்து, ராகுல் காந்தியை சந்தித்த தொழிலாளர்களை டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதை காவல் துறை வட்டாரங்கள் முழுமையாக மறுத்துவிட்டன.
இதையும்படிங்க : உடற்சூட்டை அறியும் தன்மையில் வெளியாகும் GOQii வைட்டல் 3.0 ஸ்மார்ட் கை அணிகலன்!