ETV Bharat / bharat

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய பேரணி: பஞ்சாபிலிருந்து களமிறங்கும் ராகுல் - பஞ்சாப் மாநிலம் சங்க்ரூரில் இருந்து ராகுல் காந்தி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய பேரணியை பஞ்சாப் மாநிலத்திலிருந்து ராகுல் காந்தி தொடங்கிவைக்கவுள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Oct 1, 2020, 10:17 AM IST

வேளாண் துறை சார்ந்து மத்திய அரசு அண்மையில் இயற்றிய மூன்று சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போரட்டங்களை நடத்திவருகின்றன. இதை கருப்புச் சட்டம் என குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்தச் சட்டத்தை நிறைவேற்றவிடமால் தடுக்க காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வேளாண் துறையை மையமாகக் கொண்டு இயங்கும் மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில் இந்தப் போராட்டத்தை காங்கிரஸ் தீவிரப்படுத்திவருகிறது. இதன் முக்கிய அம்சமாக, கிசான் யாத்ரா என்ற பெயரில் நாடு தழுவிய பேரணி ஒன்றை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி இந்தப் பேரணி தொடங்க இருந்ததாகவும், தற்போது மூன்றாம் தேதிக்கு மாற்றியுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தப் பேரணியை பஞ்சாப் மாநிலம் சங்க்ரூரிலிருந்து ராகுல் காந்தி தொடங்கி வைக்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான கொள்கையுடன் செயல்படுகிறது என்ற முழக்கத்துடன் ராகுல் இந்த போராட்டத்தை மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உ.பி.யில் பெண்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்; மேலும் இரு பெண்கள் பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.