மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணாமக பாஜக, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சூறாவளிப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன் தனது கடைசி பரப்புரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மும்பையில் நடைபெற்ற பயங்வாதிகள் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணை அமைப்புகள் கூறிய பின்பும்கூட காங்கிரஸ் அரசு அதை ஏற்காமல், இது உள்நாட்டினர் செய்த சதிச்செயல் என்றே கூறிவந்தனர்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நிலையான அரசை வழங்கிவருகிறார். தேவேந்திர ஃபட்னாவிஸ் மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினாரே தவிர முந்தைய காங்கிரஸ் ஆட்சியைப் போல ஊழலில் இல்லை.
எங்கள் ஆட்சியில் ஊழல் பற்றிய ஒரு சிறு புகார் கூட எழவில்லை. நாங்கள் விவசாயிகள் முதல் ஸ்டார்ட்அப் உருவாக்கும் இளைஞர்கள் வரை அனைவரது கனவுகளையும் நிறைவேற்றப் பாடுபடுகிறோம். அனைத்து சேவைகளும் ஆன்லைனுக்கு மாற்றப்படுவதால் ஊழல்கள் குறைந்துள்ளன.
ஆனால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியோ ஊழல் செய்பவர்களின் கனவுகளை நிறைவேற்றவே பாடுபட்டது" என்று காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடி பரப்புரை மேற்கொண்டார்.
முன்னதாக இந்தப் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நரேந்திர மோடி இளைய சகோதரர் என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: திடீரென்று கல்லூரி மைதானத்தில் தரையிறங்கிய ராகுலின் விமானம்!