ETV Bharat / bharat

வேலையின்மைக்கு பாஜகவே காரணம் -காங்கிரஸ் குற்றச்சாட்டு!

டெல்லி: நாட்டில் வேலையின்மைக்கும், வெளிநாட்டில் உள்ள என்ஆர்ஐ-க்களின் அவல நிலைக்கும் மத்தியில் ஆளும் பாஜகதான் காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

வேலையின்மைக்கு பாஜகவே காரணம் -காங்கிரஸ் குற்றச்சாட்டு!
வேலையின்மைக்கு பாஜகவே காரணம் -காங்கிரஸ் குற்றச்சாட்டு!
author img

By

Published : Jul 8, 2020, 10:48 PM IST

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மத்தியில் ஆளும் பாஜக அரசு 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து சமூக, பொருளாதார முன்னேற்றத்தை பின்னோக்கித்தான் எடுத்துச் செல்கிறது. அதிலும் கடந்த மூன்று மாதங்களாக கரோனா பெருந்தொற்றை கையாண்டது அவர்களின் திறனற்ற முடிவை குறிக்கிறது.

ஆளும் அரசின் தோல்வியால் நாட்டில் உள்ள உழைக்கும் மக்களும், இளைஞர்களும் வேலையின்மையால் திண்டாடிவருகின்றனர். அதுமட்டுமின்றி அமெரிக்காவில் எச் -1 பி விசாவை இடைநீக்கம் செய்ததையடுத்து, சுமார் இரண்டு லட்சம் இந்தியர்களை நாடு திரும்ப வைக்கும்” என்றார்.

மேலும், “குவைத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வேலைக்காக வருவதை குறைக்க சட்டம் கொண்டு வர அந்நாடு முடிவெடுத்துள்ளது. இதனால் இந்தியர்கள் பெரிது பாதிக்கப்படுவர். இது குறித்து காங்கிரஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டும், ஆளும் அரசின் மெத்தனத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...ஜார்க்கண்ட் அமைச்சருக்கு கரோனா - சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.