ETV Bharat / bharat

காஷ்மீரில் நடைபெறும் தகவல் போர் - குடியுரிமை திருத்தச் சட்டம்

லெப். ஜெனரல் (ஓய்வு) டி.எஸ்.ஹூடா இந்தக் கட்டுரையில் காஷ்மீர் மக்களுக்கு மத மற்றும் இன ரீதியான விஷயங்களில் அரசு அளிக்க வேண்டிய உத்தரவாதத்தின் அவசியம் குறித்தும் அதைப் பாகிஸ்தான் எவ்வாறு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது என்பது குறித்தும் விவரிக்கிறார். 2016இல் நடைபெற்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை வழிநடத்தியவர் ஹூடா என்பது குறிப்பிடத்தக்கது.

Pak propaganda in J&K
Pak propaganda in J&K
author img

By

Published : May 18, 2020, 8:44 AM IST

காஷ்மீரில் நடைபெறும் சண்டை, பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட பயங்கரவாதிகளால் நமது தரப்பு எல்லையிலுள்ள பிரிவினைவாதிகள் மற்றும் ஊழல் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் கட்டவிழ்த்துவிடப்பட்டு, தவறாக வழிநடத்தப்பட்ட உள்ளூர் இளைஞர்கள் துப்பாக்கி ஏந்துவதால் நடத்தப்படும் ‘மறைமுகப் போர்’ என அடிக்கடி வர்ணிக்கப்படுவது உண்டு. இந்த வர்ணனை பொருத்தமற்றது எனக் கூறிவிட முடியாது, அதே நேரம் இது, காஷ்மீர் பிரச்னையின் முழுமையான நிலைமையை வெளிப்படுத்தவும் இல்லை.

மக்களின் ஆதரவு இல்லாமல் எந்த ஒரு ஆயுதக் கிளர்ச்சியுமே முப்பது ஆண்டுகளாக நீடிக்க முடியாது. காஷ்மீர் பிரச்னைக்கு நாம் நீண்ட காலத் தீர்வு காண, பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவை பலவீனப்படுத்துதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களைத் தடுத்தல் ஆகிய நமது முயற்சிகளோடு, அப்பகுதி பொதுமக்கள் மீதும் நாம் மிக அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்குப் பதிலாக, ‘கிளர்ச்சி’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது காஷ்மீரில் நடப்பதைச் சிறுமைப்படுத்தும் செயல் என்று யாரேனும் கூறுவதற்கு முன்பு, பயங்கரவாதமும் கிளர்ச்சியில் பயன்படுத்தப்படும் ஒரு கருவி என்ற விளக்கத்தைத் தந்துவிடுகிறேன்.

கிளர்ச்சிகளைத் தடுத்தல் என்பது பெரும்பாலும் “இதயங்கள் மற்றும் மனங்களின்” செயல்திட்டம் என்று குறிப்பிடப்படுவதுண்டு, ஆனால் உண்மையில் இந்தச் செயல்பாடுகள் இதயத்தை விட மனத்தையே பெரிதும் சார்ந்திருக்கின்றன. தகவல்கள், பரப்புரைகள், போலிச் செய்திகள் ஆகியவை நிறைந்திருக்கும் காலகட்டத்தில், ஒரு சண்டையின் போது நடைபெறும் உண்மையான போட்டி என்பது மக்களின் மனங்களில் எப்படி செல்வாக்கைச் செலுத்துகிறது என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தகவல் உத்திகளின் வாயிலாக, மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றுவிட வேண்டும் என்பதில் பயங்கரவாதிகள் மற்றும் அரசு ஆகிய இரு தரப்புமே போட்டியிடுகின்றனர், இந்த முயற்சிதான், மக்களை அவர்கள் பக்கம் திருப்புகிறது. ராணுவத்தில், இதனை நாங்கள் ‘தகவல் யுத்தம்’ அல்லது ‘சொல்லாற்றலின் சண்டை’ என்று வர்ணிப்போம்.

இந்தச் சண்டையில், பொய்ச் செய்திகளையே அதிகம் சார்ந்திருக்கும் பயங்கரவாதிகளுக்கு அதிகச் சாதகம் நிலவுகிறது. “உண்மை உலாவத் தொடங்குவதற்கு முன்பு, ஒரு பொய் உலகின் பாதியைச் சுற்றி வந்து விடுகிறது” என்று வின்ஸ்டன் சர்ச்சில் கூறியிருக்கிறார். உலகத் தகவல் தொடர்புகள் வானொலியையும், தந்தியையுமே பெரிதும் சார்ந்திருந்த காலத்தில் இது சொல்லப்பட்டது.

இன்றோ, ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுவதிலும் உடனடியாகத் தகவல்களைப் பரப்பிவிடுகின்றன. அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனம், கடந்த 2018இல் நடத்திய ஒரு ஆய்வின் மூலம், உண்மையான தகவல்களை விட பொய்ச் செய்திகளே 70 விழுக்காடு அதிகமாக ரீ ட்வீட் செய்யப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தானின் பரப்புரை என்பது முக்கியமாக இரண்டு கருத்துப் பொருள்களை மையமாகக் கொண்டுள்ளது. அதில் முதலாவது, வளர்ந்துவரும் ஹிந்து தேசியவாதத்தால் காஷ்மீரிகளின் மத நம்பிக்கை மற்றும் இன அடையாளம் ஆகியவை அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறி, பயங்கரவாதிகளை இவற்றின் பாதுகாவலர்களைப் போலச் சித்தரிப்பது.

இரண்டாவது, காஷ்மீர் மக்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றைப் பெரிதாக்கிக் காட்டுவது. இந்த இரண்டு விதமான விவரிப்புகளையும், இந்திய அரசின் செய்தி மற்றும் தகவல் தொடர்பு உத்தி முறியடித்தாக வேண்டும்.

இதில், இரண்டாவது கருத்துப் பொருளை எளிதில் நிராகரித்து விடலாம் – ஏனெனில் இதற்குப் பெரிய அளவிலான கட்டுப்பாடான அணுகுமுறை நீடித்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது, இதனை, நமது பாதுகாப்புப் படைகள் ஏற்கெனவே வெளிப்படுத்திக் காட்டியுள்ளன. இடர்பாடான சூழலில் ராணுவத்தைப் பயன்படுத்துமாறு உதவி கோரப்பட்டிருந்தாலும்கூட, பொதுமக்களின் உயிருக்கு ஏற்படும் பக்கவிளைவுச் சேதத்தைக் குறைத்துக்கொண்டு, பயங்கரவாதிகளை மட்டுமே துல்லியமாகக் குறி வைத்தாக வேண்டும்.

ராணுவத்தின் கரங்களைக் கட்டிப்போடக்கூடாது அல்லது பொதுமக்கள் வாழும் பகுதிகளிலும் குண்டு வீச வேண்டும் எனக் கூறுவோரின் அழைப்புகளுக்கும் நாம் செவி சாய்த்து விடக் கூடாது. ராணுவத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது, பெரும்பாலும் பயங்கரவாதிகள் தரப்பில் கூடுதல் ஆள்களைச் சேரச்செய்யும் மோசமான நிலைமைகளுக்கு வழி வகுத்துவிடும்.

மனித உரிமைகள் தொடர்பான பரப்புரைகளை இந்தியா கையாளுவதில் வெளிப்படைத்தன்மை குறைவாக இருப்பதாக சில அமைப்புகள் கண்டனம் எழுப்புகின்றன. தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்ற அதே நேரத்தில், வேறுபடுகின்ற மற்றும் மாறுபடுகின்ற அதிருப்திக் குரல்களை எல்லாம் நாம் அவசரக் கோலத்தில் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களது மதத்துக்கும், இன அடையாளத்துக்கும் அச்சுறுத்தல் எழுந்துள்ளதாகக் கருதுவதைப் போக்கி, அவர்களுக்கு மறு உத்தரவாதம் அளிப்பது தான் முக்கியமான சவால். பாகிஸ்தானும், பிரிவினைவாதிகளும் இந்த அச்சத்தைத்தான் தொடர்ந்து பகடைக் காயாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அத்துடன், 370ஆவது சட்டப் பிரிவு ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் பிப்ரவரியில் டெல்லியில் நிகழ்ந்த மத மோதல்கள் போன்ற பிரச்னைகள் அவர்களுக்குப் புதிய ஆயுதங்களாகக் கிடைத்துள்ளன.

துரதிருஷ்டவசமாக, பாகிஸ்தானின் பரப்புரைகளுக்குப் பதிலடி கொடுப்பதிலோ அல்லது தனது தரப்பு விவரங்களை எடுத்துச் சொல்வதிலோ அரசு குறைவான சுறுசுறுப்பையே காட்டுகிறது. அதிவேக இணையச் சேவைகள் ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், பொய்ச் செய்திகளின் வருகை தடுத்து நிறுத்தப் பட்டிருப்பதாகத் தோற்றம் அளித்தாலும், நாட்டின் மற்ற பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரக் கருத்துகள் பரவுவதைத் தடுப்பதில் சிறிய அளவிலான நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் உணர்வுகளைத் தணிப்பதில் அரசினுடைய தகவல் தொடர்பானது, முற்றிலுமாக இல்லை அல்லது பயனற்ற வகையில் உள்ளது.

வலிமையான எடுத்துச்சொல்லல் என்பது வெறுமனே தகவலைக் கொடுப்பது மாத்திரம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம் ஆகும். அந்தத் தகவலுடன் காணக்கூடிய செயல்பாடுகளும் அதனோடு பொருந்தி, துணை நிற்க வேண்டும். பரிவு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த உறுதிமொழிகள், காணக்கூடிய திட்டங்களால் களத்தில் நிகழும் வளர்ச்சியோடு இணைந்து செல்லவில்லை என்றால், அவற்றால் விளையும் தாக்கம் சிறிதாகவே இருக்கும்.

ஜம்மு - காஷ்மீரில் நடைபெறும் தகவல் தொடர்பு குறித்த போட்டியில் வெல்வதற்கான வழிமுறைகளை அரசு அக்கறையோடு காணத் தொடங்க வேண்டும். இதற்குத் தகுந்த வல்லுநர்களை ஊழியர்களாகக் கொண்ட அர்ப்பணிப்புடன் கூடிய அமைப்பானது, சமூக ஊடகம் மற்றும் பிறவற்றில் வரும் தகவல்களை விரிவாகப் பகுப்பாய்வு செய்து, உள்ளூர், பிராந்தியம், தேசியம் மற்றும் சர்வதேச அளவுகளில் பயன்படுத்தக் கூடிய உத்திகளை வகுக்க வேண்டும். பொய்ச் செய்திகள் மற்றும் பரப்புரைகளுக்கு பதில் உரைப்பதற்காக, நம்பிக்கைக்கு உரிய ஊடகக் கூட்டாளிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இறுதியாக, ஆற்றலின் அனைத்துப் பயன்பாடும், மக்களின் கண்ணோட்டங்களை மாற்றுவதற்காக அல்லது அவர்களிடையே செல்வாக்கைச் செலுத்துவதற்காகவே உள்ளது. மக்களிடையே ஆழ்ந்த அதிருப்தி நிலவுகின்ற காஷ்மீரில், பாகிஸ்தான், தகவல் செயல்பாடுகளையே அதன் முதன்மைக் கருவியாகப் பயன்படுத்துகிறது; தனது வர்ணனைகளுக்குப் பக்கபலமாக பயங்கரவாதத் தாக்குதல்களை இரண்டாவது கருவியாகவே உத்தியுடன் கையாளுகிறது. நாம் அறிவாற்றல் சார்ந்த போட்டியில் இருக்கிறோம், இந்நிலையில் இந்தச் சண்டையில் நாம் இரண்டாவது இலக்கில் மாத்திரமே கவனத்தைக் குவித்துவிட்டு, தகவல் களத்தில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்றால், வெற்றி நிச்சயமல்ல.

இதையும் படிங்க: ராகுல் காந்தியிடம் பேசிய வெளிமாநில தொழிலாளர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.