ETV Bharat / bharat

காமன்வெல்த்: இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற இந்தியா! - டேபின் டென்னிஸ்

கட்டாக்: 21ஆவது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்திய அணியின் சத்தியன், அர்ச்சனா காமத் ஜோடி 3-0 என்ற செட் கணக்கில் தங்கப்பதக்கத்தை வென்றது.

Commonwealth TT Championship
author img

By

Published : Jul 22, 2019, 10:38 AM IST

21ஆவது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலத்தில் கட்டாக்-இல் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜி. சத்தியன், அர்ச்சனா காமத் ஜோடி, சிங்கப்பூரின் பெங் யூ யென் கோயன், கோய் ரூய் சுவான் ஜோடியை 3-0 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

இதன் மூலம் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாளைக்கு முந்தைய நாளான நேற்று இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களை வென்றது.

இதே சிங்கப்பூர் அணியிடம் சக இந்திய இணையான சரத் கமல்-ஸ்ரீஜா அகுலா அரையிறுதியில் தோற்கடிக்கப்பட்டதற்கு, தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. மேலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் ஏற்கனவே காலிறுதிப் போட்டியில் பெங்கை எதிர்கொண்டார்.

இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற சத்தியன், அர்ச்சனா காமத் ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். மேலும், பென்க் நேற்றைய ஆட்டத்தில் சரிவர விளையாடாமல் இருந்ததே, போட்டியில் தோற்றதற்கு காரணம் என போட்டியாளர்கள் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.