வர்த்தக மற்றும் வளர்ச்சிக்கான ஐநாவின் மாநாட்டின் (United Nations Conference on Trade And Development) தரவுகளின்படி வளரும் நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் பொருள்கள் ஏற்றுமதியை சார்ந்த பொருளாதாரமாக உள்ளன. இது, தாதுக்கள், தானியங்கள், எரிசக்தி போன்ற முதன்மைப் பொருள்களின் ஏற்றுமதியை நம்பியுள்ள நாடுகளுக்கு பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு பொருள்களின் ஏற்றுமதியைச் சார்ந்த வளரும் நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி 2.9 பில்லியன் டாலர் முதல் 7.9 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மொத்த ஆண்டு வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் 9 விழுக்காடு இழப்பு ஆகும்.
உலகளாவிய பொருள்கள் ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பகுதியை சீனா ஏற்றுமதி செய்கிறது. அதன் இறக்குமதியில் இத்தகைய வீழ்ச்சி ஏற்படும்போது, மற்ற நாடுகளின் முதன்மைப் பொருள்களின் உற்பத்தியாளர்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒப்பீட்டளவில் பிரிக்கப்படாத தயாரிப்பு மட்டத்தில் இதுவரை சில மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மற்ற பெரிய சந்தைகளிலும் இதேபோன்ற புள்ளி விவர பகுப்பாய்வை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது. மொத்த ஏற்றுமதியில் முதன்மையாக சீன எரிசக்தி தேவை எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
பொருள்கள், தாதுக்கள், தானியங்கள், இயற்கை எரிவாயுக்களின் இறக்குமதி 2020ஆம் ஆண்டில் 10 விழுக்காடு வரை குறையக்கூடும் என்று கணிக்கிடப்பட்டுள்ளது. இது கரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு 10 விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்த போதிலும், தற்போது இரும்பு இறக்குமதி அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,
மேலும், கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அந்நாட்டின் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சி பாதிக்கக்கூடும் என்றும், முந்தைய ஆண்டு வளர்ச்சியைக் காட்டிலும் ஆறு முதல் 19 சதவிகிதம் வரை இதில் இழப்பு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, பொருள்களை சார்ந்து வளரும் நாடுகளில் இருந்து சோயா பீன்ஸ் சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. முந்தைய கணிப்புகளை விட இது 10-34 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மியான்மர் போன்று சீனாவிற்கு இயற்கை வாயுக்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்பவர்கள் தங்கள் நாட்டு வர்த்தகத்தில் முன்னேற்றங்களைக் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா தொற்றின் தாக்கம் சில நாடுகளின் வர்த்தகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : கரோனா தடுப்பூசி: தீவிரம் காட்டும் இஸ்ரேல்!