ETV Bharat / bharat

முப்படையில் அலுவலராக பணியாற்ற விருப்பமா? - அப்போ இது உங்களுக்குதான்!

author img

By

Published : Nov 15, 2019, 8:20 AM IST

டெல்லி: இந்தியாவின் முப்படைகளில் உள்ள அலுவலர் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

combined-defence-services-examination-JOB

இந்திய அரசின் முப்படையான தரைப்படை, கப்பற்படை, விமாடைப் படையில் 418 அலுவலர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான பாதுகாப்புப் பணிகளுக்கான தேர்வு 2020ஆம் ஆம் ஆண்டு நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்,

கல்வித் தகுதி:

1. டேராடூன் இந்திய ராணுவப் பயிற்சி நிறுவனம், சென்னை அலுவலர்கள் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் சேர்க்கை பெறுவதற்கு, ஏதாவதொரு பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

2. எழிமலா, இந்திய கப்பற்படைப் பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை பெறுவதற்குப் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. ஹைதராபாத், விமானப் படைப் பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை பெறுவதற்கு, ஏதாவதொரு பட்டப்படிப்பு (10, +12 வகுப்பில் இயற்பியல், கணிதப் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்) அல்லது பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

டேராடூன் இந்திய ராணுவப் பயிற்சி நிறுவனம், எழிமலா இந்திய கப்பற்படைப் பயிற்சி நிறுவனப் பயிற்சிக்குத் திருமணமாகாத ஆண்கள், 2.1.1997 முதல் 1.1.2002 வரையிலான காலத்திலும், ஹைதராபாத், விமானப் படைப் பயிற்சி நிறுவனப் பயிற்சிக்கு 2.1.1997 முதல் 1.1.2001 வரையிலான காலத்திலும் பிறந்தவராக இருத்தல் வேண்டும். தேவையான உடற்தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் https://upsconline.nic.in/ என்னும் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகளுக்கான தேர்வு (I) 2020 (Combined Defence Services Examination (I) 2020) விண்ணப்பப் படிவத்தை இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பமானது, பகுதி 1, பகுதி 2 என்று இரு பகுதிகளாகச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

பகுதி 1 விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர், விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 200/- செலுத்திவிட்டு, பகுதி 2 விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர், பெண் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 19.11.2019

தேர்வு முறை:

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உள்பட இந்தியா முழுவதும் 41 நகரங்களில் முதற்கட்ட எழுத்துத் தேர்வு 2.2.2020 அன்று நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான அனுமதி அட்டையை (E-Admit Card) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து, தேர்வு நாளுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

எழுத்துத் தேர்வுக்குப் பின்பு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத்திறன் தேர்வு, ஆளுமைத் திறன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியுடையவர்கள் தேர்வுசெய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்கள், குறிப்பிட்ட பயிற்சி நிறுவனங்களில் 2021ஆம் ஆண்டு ஜனவரி / ஏப்ரல் மாதம் தொடங்கும் பயிற்சியில் சேர வேண்டும். அந்தப் பயிற்சியை நிறைவு செய்ததும், அவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

கூடுதல் தகவல்கள்:

இந்தத் தேர்வு குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் http://upsconline.nic.in இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகளுக்கான தேர்வு (I) 2020 தகவல் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

(அல்லது)

டெல்லியிலுள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தின் `சி’ வாசல் அருகில் அமைந்திருக்கும் உதவி மையத்துக்குச் (Facilitation Counter) சென்று நேரடியாகக் கேட்டுப் பெறலாம். தேர்வாணைய அலுவலகத்தின் அலுவலக வேலைநேரத்தில் 011 - 23385271, 23381125, 23098543 எனும் எண்களில் தொடர்புகொண்டும் பெறலாம்.

இதையும் படிங்க...."மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி"- பொன்முடி பெருமிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.