ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துவருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துவருகிறது. இதனிடையே, வடக்கு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ராஜஸ்தானைச் சேர்ந்த ராணுவ வீரர் அசுதோஷ் சர்மா உயிரிழந்தார்.
சர்மாவின் சொந்த ஊரில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் அவரின் உடலுக்கு முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தென் மேற்கு ராணுவ தளபதி அலோக் க்லர், ஜெய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் ஜோகாராம், ராணுவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் அதில் கலந்து கொண்டனர். வடக்கு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சர்மா உள்பட ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொருளாதார மீட்டெடுப்பு திட்டம் தேவை - ராகுலுக்கு ஐடியா சொன்ன அபிஜித் பானர்ஜி