கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வைரஸ் நோய்க்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு முப்படைகளின் சார்பில் நேற்று நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று மாலை புதுச்சேரியில் இந்திய கடலோர காவல்படையின், கப்பல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பச்சைநிற வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்ததும், கப்பல்களில் சைரன் ஒலிக்கப்பட்டது. சாதாரண நாள்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் கடற்கரை, கரோனா தடுப்பு நடவடிக்கையால் வெறிச்சோடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோயம்பேட்டிலிருந்து யாரும் இதுவரை வரவில்லை - காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உறுதி