ETV Bharat / bharat

நிலக்கரிக்கு வேட்டுவைக்கும் கரோனா : 2ஆம் உலகப் போருக்குப் பின் வரும் பெரும் சரிவு! - கரோனா ஊரடங்கு நிலக்கரி தேவை சரிவு

கரோனா பெருந்தொற்று காரணமாக உலகளவில் இந்த ஆண்டிற்கான நிலக்கரித் தேவை 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

coal
coal
author img

By

Published : Apr 30, 2020, 8:51 PM IST

சீனாவின் வூஹான் மாநகரில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது உலகையே பீடித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள சூழலில், உலகளவில் ஆற்றலுக்கான தேவை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட சர்வதேச ஆற்றல் முகமையம், "2020ஆம் ஆண்டு ஆற்றலுக்கான தேவை 6 சதவீதம் குறையக்கூடும். இது, 2008ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட ஆற்றல் சரிவைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமாகும்" எனக் கூறியுள்ளது.

ஒப்பீட்டு அளவில் பார்த்தால், இந்த சரிவு இந்தியாவின் மொத்த ஆற்றல் தேவையை இழப்பதற்குச் சமம்!

மேலும், இந்த ஆண்டு அமெரிக்காவின் ஆற்றல் தேவை 9 சதவீதம் குறையவுள்ளதாகவும். அதேவேளையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தேவை 11 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சர்வதேச ஆற்றல் முகமையம் கூறியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இருந்தைப் போல உலக நாடுகளில் ஊரடங்கு தொடர்ந்தால், ஆற்றலுக்கான தேவை ஏறக்குறைய 1.5 சதவீதம் சரிவை சந்திக்கக்கூடும் எனவும் அந்த முகமையம் எச்சரித்துள்ளது.

"முழு ஊரடங்கு காரணமாக மின் தேவையின் அளவு 20 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் 2020ஆம் ஆண்டில் உலக மின் தேவை 5 சதவீதம் வரை குறையக்கூடும். 1930ஆம் ஆண்டின் பெரும் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் மின் தேவை வீழ்ச்சிக்குச் சமம்.

குறிப்பாக நிலக்கரியின் தேவை 8 சதவீதம் வரை குறையவுள்ளது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து நடக்கும் பெரும் வீழ்ச்சி இதுவாகும்.

கடந்த 10 ஆண்டுகளாக ஏறுமுகத்தில் பயணித்து வந்த இயற்கை எரிவாயுவின் தேவை 5 சதவீதம் வரை சரியும்" என அந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், காற்று, சூரியன், நீர், அணு சக்தி ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும் மின் தேவையின் அளவு 40 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஆற்றல் முகமையத்தின் செயல் இயக்குநர் ஃபாதி பிரோல் கூறுகையில், "கரோனா பெருந்தொற்று ஆற்றல் துறையில் வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் தேவை கணிசமாகக் குறைந்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மின் தேவை சுருங்கி வரும் சூழலில், புதுப்பிக்கவல்ல ஆற்றல்களுக்கான தேவை நிலையாக இருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க : நாடு முழுக்க கரோனா பரிசோதனை சாத்தியமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.