ETV Bharat / bharat

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் - நாராயணசாமி

புதுச்சேரி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

pondy cm
author img

By

Published : Jun 6, 2019, 12:09 PM IST

உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு சுற்றுச்சூழல் ஆண்டு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘புதுச்சேரியில் சுற்றுச்சூழலை முறையாக வைத்திருக்கவும், அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்படியான திட்டங்களையும் சுற்றுச்சூழல்துறை உருவாக்க வேண்டும்.

நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பு மகளிர்க்கு உள்ளது. தற்போது வாகனங்கள் பெருகிவிட்டதால் அதிலிருந்து வெளியேறும் புகையால் ஏற்படும் மாசுவை குறைக்க மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் ஓராண்டிற்கு மின்சாரத்திற்காக ரூபாய் 1,300 கோடி செலவு செய்கிறோம். வீடுகளில் சோலார் பேனல் பொருத்தினால் மின்சாரம் வாங்கும் தொகையை பெரியளவில் சேமிக்க முடியும்.

இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்க முடியும். சோலார் பேனல்களை வீடுகளில் அமைத்துக்கொள்ள மத்திய அரசு 40 விழுக்காடு மானியம் வழங்குகிறது. இதன் மூலம் வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளலாம். மீதமுள்ள மின்சாரத்தை அரசுக்கு கொடுக்கலாம்’ என்றார்.

மேலும் அவர் பேசுகையில், சுற்றுச்சூழல் துறை தனியாருடன் ஒன்றிணைந்து மாதந்தோறும் ஒரு முறை கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் இதன் மூலம் சுற்றுலா வளர்க்க முடியும் என தெரிவித்தார்.

அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் இயக்குனர் ரவிபிரகாஷ், எம்எல்ஏக்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இதில் சுற்றுச்சூழல் துறை ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.