புதுச்சேரியில் இன்று தடையை மீறி உலா வந்ததாக அனைத்துக் காவல் நிலையங்களிலும் 47 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே பொதுமக்கள், அத்தியாவசிய பொருள்கள் விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் அரசின் விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரி நகரின் முக்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், அண்ணாசாலை பகுதியில் செயல்பட்டு வந்த மருந்தகத்தின் உரிமையாளரை அழைத்து மக்களுக்கு பாதுகாப்பான முறையில் பொருள்கள் விற்பனை செய்ய வேண்டும்.
சமூக இடைவெளி உள்ளிட்டவை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர், அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற அவர், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: புதுச்சேரி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு