புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகிறது. மேலும், மாநிலத்தில் உள்ள 82 எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. இதுவரை மூன்று பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்
இந்நிலையில் புதுவை மாநில எல்லையான கோரிமேட்டில் முதலமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ சோதனை மையத்தை ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு தகவல்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து வெளிமாநில மக்களைத் தேவையின்றி மாநில எல்லைக்குள் அனுமதிக்க வேண்டாம் என காவல் துறையினருக்கு முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள புதுச்சேரி மக்களை அழைத்துவர நடவடிக்கை!