புதிய வகை கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த கிறிஸ்தவ பாதிரியார் செவ்வாய்க்கிழமை (ஜூன்2) உயிர் இழந்தார். அவருக்கு வயது 76. அவர் மேலும் சில நோயால் அவதியுற்று வந்துள்ளார்.
இதனால் அவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா வைரஸூக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் மாநிலத்தில் புதிதாக 86 பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டனர். இவர்களில் 46 பேர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கூறினார்.
மேலும், “தற்போது வரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் 774 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 19 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 670 பேர் கரோனா தனிமைப்படுத்துதல் முகாமில் உள்ளனர்” என்றும் சைலஜா சுட்டிக்காட்டினார்.
கேரளாவில் பொதுஅடைப்பு விதிகளை மீறியதாக மாநில காவல்துறையினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) 665 பேர் மீது 647 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். 219 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உத்தரகண்ட் தலைநகராக கெய்சைனை அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி