ETV Bharat / bharat

கர்நாடகா வரை தொடரும் சீனர்களின் நம்பிக்கை!

பெங்களூரு: எல்லையில்லாத சீன மக்களின் மூடநம்பிக்கையால் நாட்டில் புலிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக கர்நாடக வனத்துறையின் முதன்மைப் பாதுகாப்பு அலுவலர் மனோஜ்குமார் கவலை தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 31, 2020, 2:11 AM IST

chinese-viagra-and-poison-kept-by-miscreants-pose-threat-to-existence-of-tigers

நேற்று உலகம் முழுவதும் புலிகள் தினம் அனுசரிக்கப்பட்ட வேளையில், புலிகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கிறார் கர்நாடக வனத்துறையின் முதன்மைப் பாதுகாப்பு அலுவலர் மனோஜ்குமார். இதுகுறித்து அவர் பேசுகையில், “சீன மக்கள் வைத்திருக்கும் மூடநம்பிக்கைகளுக்கு அளவே இல்லை. அந்த மூடநம்பிக்கைகள் வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்களை அதிகரித்துள்ளன. இவை வனங்களின் பாதுகாவலனான புலிகளின் இருப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

சீனாவில் புலிகளின் தோல், பற்கள், எலும்புகளுக்கு மருத்துவக் குணங்கள் இருப்பதாக அந்நாட்டு மக்கள் நம்புகின்றனர். அவற்றைப் பயன்படுத்தி பல்வேறு மருந்துகளைத் தயாரிக்கின்றனர். இதனால் சீனாவில் மேற்குறிப்பிட்டவற்றிற்கு பெரும் தேவை உள்ளதால், அங்கு புலிகள் பெருமளவில் வேட்டையாடப்படுகின்றன.

1994-2000 இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவில் 226 புலிகள் வேட்டையாடப்பட்டு, அவற்றிடமிருந்து 1,007 கிலோகிராம் தோல் மற்றும் எலும்புகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில், புலிகளின் தோல் 20 ஆயிரம் ரூபாய்வரை மதிப்பிடப்படுகிறது. இந்தியாவின், வேட்டைக்காரர்கள் அவற்றை ஐந்தாயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, புலிகளின் கொழுப்பானது வாந்தி, நாய் கடித்தல் மற்றும் குழந்தைகளின் மோசமான ஆரோக்கியத்தை சீராக்குவதற்கான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. புலியின் இறைச்சி, மலேரியா காய்ச்சல், பல்வேறு மனநலப் பிரச்னைகள் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

புலிகளின் வால், தோல் பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. புலியின் இறைச்சி, செரிமானம் தொடர்பான பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க பயன்படுத்தப்படுகிறது. இந்த நம்பிக்கைகள் இந்தியாவின் ஒரு சில வட மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது.

புலிகளின் எலும்பானது, எலும்பு முறிவு, புண், இடுப்பு வலி, மந்திரவாதிகள் மக்களிடம் நம்பிக்கையைத் தூண்டுவதற்குப் பயன்படுத்துகின்றனர். மூளைச் சோம்பல், பருக்கள் போன்றவற்றை நீக்கவும் மக்களைச் சுறுசுறுப்பாக்குவதற்குப் பயன்படுகிறது. குழந்தைகளின் பயத்தைப் போக்க பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, புலிகளின் இறைச்சியைக் கொண்டு வயகரா மாத்திரையும் தயாரிக்கப்படுகிறது. இதன் விளைவாக புலி இறைச்சிக்கான தேவை பெரிதும் அதிகரித்தது. இந்தச் சீன மக்களின் நம்பிக்கை இப்போது கர்நாடகா முழுவதும் காட்டுத்தீ போல் பரவிவருகிறது.

தொடர்ந்து, புலிகளின் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. முந்தைய காலங்களில் பொழுதுபோக்கிற்காகப் புலிகள் வேட்டையாடப்பட்டன. இன்று மூடநம்பிக்கைகளின் பெயரில் கொல்லப்படுகின்றன. இந்த மனித-வனவிலங்கு மோதல் மிகுந்த அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது.

புலிகளைக் கொல்ல கண்ணி வெடிகள், விஷம் செலுத்தப்பட்ட இறைச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. வனப்பகுதிகள் சுருங்குவதாலும், இடைப்பகுதிகளில் வணிக நடவடிக்கைகள் அதிகரிப்பதாலும் வன விலங்குகளுக்கு மேலும் பல ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன.

வன விலங்குகள் வேட்டையாடப்படுவதைக் கட்டுப்படுத்துவதோடு, வனத்துறையினர் பல்வேறு பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். புலிகளைக் காப்பாற்றினால், அது ஆரோக்கியமான சூழலியலில் பிரதிபலிக்கும். இன்று உயிரியல் பூங்காக்களில் அடைக்கப்பட்டுள்ள புலிகளின் எண்ணிக்கை அவற்றின் இயற்கை வாழ்விடங்களுடன் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையில் உள்ளன.

வனங்களில் புலிகள் காக்கப்பட்டால் நம் வாழ்க்கை இனிமையாக அமையும். இல்லையென்றால் நாமும் புலிகளுடன் சேர்ந்து அழிவோம்" என்றார் வருத்தத்துடன்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.