ETV Bharat / bharat

'நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கை மோசம்'- ராகுல் காந்தி - இந்தியா சீனா மோதல்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கை மிகவும் மோசமாக இருப்பதாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, உலக நாடுகளுடன் மகாத்மா காந்தி நட்பு பாராட்டியதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
author img

By

Published : Jun 24, 2020, 9:03 AM IST

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி, மோடி அரசின் வெளியுறவு கொள்கை மிக மோசமானதாக இருப்பதாகவும், அதனாலேயே இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்க பிரதமர் மோடி ஒப்படைத்து விட்டார். அந்த நிலப்பகுதி சீனாவுடையது என்றால் நம் வீரர்கள் ஏன் கொல்லப்பட வேண்டும்? அவர்கள் எங்கு கொல்லப்பட்டார்கள்?

சீனாவின் ஆவேசமான போக்கை தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டார்கள். இரண்டாவது முறையாக சீனா இந்தியாவின் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இனிமேலாவது இந்தியா தனது கொள்கையை மாற்றுமா என ஜப்பான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உண்மையில் அவர் நரேந்திர மோடி அல்ல, சரண்டர் மோடி. உலக நாடுகளுடன் மகாத்மா காந்தி நட்பு பாராட்டியதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும்” என்றும் கூறினார்.

இதையும் படிங்க: 'சுயசார்ப்பு பொருளாதார திட்டம் இந்தியாவை மாற்றியமைக்கும்'- ஜே.பி. நட்டா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.