சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 நோய்த் தொற்று, தற்போது 180-க்கும் அதிகமான நாடுகளில் பரவி வருகிறது.
தொற்று மேலும் பரவுவதை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ள உலக நாடுகள், சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவைக்குத் தடைவிதித்துள்ளன.
இதன் காரணமாக, வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் தன் குடிமக்களை உலக நாடுகளும் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவில் சிக்கியுள்ள சீன மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள் உள்ளிட்ட தனது குடிமக்களை மீட்க அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.
இந்தியாவில் கோவிட்-19இல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ள சூழலில், இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வாரங்கல் கொலை: காதலித்த பெண்ணின் மகள் மீது மோகம்! கொலைக்கான காரணம் வெளியீடு