கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுமி , திருச்சியில் அவர்களது உறவினர்கள் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக கோவைக்கு திரும்பிய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் தேடி அலைந்துள்ளனர். பின்னர், ராமநாதபுரம் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி மாயமானது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் சிறுமி தானாகவே மறுநாள் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து, சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் , அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் செல்வம்(32), அவரது நண்பர்கள் சூரியராஜ் , ராஜா ஆகிய மூவரும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி செல்வம் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து, காவல் துறையினர் அவர்கள் மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு அவர்களை செய்து கைது செய்தனர்.