டெல்லி: கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தில் சிக்கித் தவித்த 17 வயது சிறுவன், 17 வயது சிறுமி என 400க்கும் மேற்பட்டவர்களுக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் உளவியல் சிகிச்சை அளித்துள்ளது.
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் செப்டம்பர் மாதத்தில் இலவச செல்போன் சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியது. கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் குழந்தைகளுக்கு உளவியல் சிகிச்சை அளிப்பதே இதன் பிரதான நோக்கம்.
இந்த அமைப்பிற்கு தற்போது 400க்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகள் வந்துள்ளன. 17 வயது மாணவன் ஒருவனால், கரோனா பாதிப்புக்கு பிறகு அவனது படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் அவருக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் உளவியல் சிகிச்சை அளித்தது.
இதேபோல் 17 வயத மாணவி ஒருவர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து மீண்ட நிலையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரால் இரவில் தூங்க முடியவில்லை. சாப்பிட்ட உணவும் செரிக்கவில்லை.
இந்நிலையில் அவர் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது மருத்துவர்கள் அச்சிறுமிக்கு உளவியல் சிகிச்சை அளித்தனர். மேலும் சில பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்தனர்.
இரவில் எடுக்க வேண்டிய உணவு மற்றும் அதன் அளவு குறித்தும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். தற்போது அச்சிறுமி நலமுடன் உள்ளார். இந்தத் தகவல்கள் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பாதித்த குழந்தைகள் அதிலிருந்து மன ரீதியாக மீளும் வகையில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் செப்டம்பர் மாதம் என்ற 1800-121-2830 எண்ணை அறிமுகப்படுத்தியது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: ட்ரம்ப் மூத்த மகனுக்கு கரோனா பாதிப்பு!