குழந்தைகள் கடத்தல்
இது தொடர்பாக அஸ்ஸாம் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணைய (ஏ.எஸ்.சி.பி.சி.ஆர்) தலைவர் சுனிதா சாங்ககட்டி (unita Changkakati) கூறியதாவது:
அஸ்ஸாமில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இது தொடர்பாக நடப்பாண்டில் மட்டும் 125 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நவம்பரில் 17 குழந்தைகள் கடத்தல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 11ஆக இருந்தது. இதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு எதிரான மற்ற குற்றங்களும் கணிசமாக அதிகரித்துள்ளன.
அறிக்கையில் உள்ள தகவல்களின் அடிப்படையில் மற்ற குற்ற நிலவரம்:
இதேபோல் குழந்தைகளுக்கு (சிறுவர்-சிறுமியர்) எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளும் அதிகரித்துள்ளன. 2018ஆம் ஆண்டு இந்தக் குற்றங்கள் 43 ஆக இருந்தது. தற்போது அது 53ஆக அதிகரித்துள்ளது. மனதுக்கு ஆறுதல் தரும்வகையில் குழந்தைகள் திருமணம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆறு வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது அது ஐந்தாக குறைந்துள்ளது. குழந்தைகளின் உரிமை மீறல் வழக்குகளும் 20 லிருந்து 13ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் குழந்தைத் தொழிலாளர் வழக்குகள் 2018இல் 10 லிருந்து ஐந்தாகக் குறைந்துள்ளது. இது 2018இல் 36 ஆக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
செயலி அறிமுகம்
இதையடுத்து சிறுவர் உரிமை மீறல்கள், பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு புகார்களை பதிவு செய்வதற்கான செயலி ஒன்றை சுனிதா அறிமுகப்படுத்தினார். அந்தச் செயலிக்கு 'சிஷு சுரக்ஷா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தச் செயலி வாயிலாக மாநிலம் முழுவதிலுமிருந்து பயனர்கள் புகார் அளிக்க முடியும். இது நமது எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பை மக்களுக்கு அளிக்கும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: நாகாலாந்து அமைதி ஒப்பந்தம் குறித்து அசாம் முதலமைச்சர் கருத்து!