ETV Bharat / bharat

ராகுல் காந்தி சென்ற விமானத்தில் கோளாறு

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Rahul gandhi
author img

By

Published : Apr 26, 2019, 12:32 PM IST

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்துவருகிறது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பரப்புரைக்காக பல்வேறு மாநிலங்களுக்கு செல்வதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிகார், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பரப்புரை பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதாக இருந்தது.

இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பாட்னாவுக்கு புறப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் டெல்லிக்கே ராகுல் காந்தி திரும்பினார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பாட்னாவுக்கு செல்லும் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் டெல்லிக்கு திரும்பும் நிலை நேரிட்டது. இன்று நடைபெற இருந்த சமஸ்திபூர் (பிகார்), சங்கம்னேர் (மகாராஷ்டிரா), பாலசோர் (ஒடிசா) ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்கள் தாமதமாக நடைபெறும்” என பதிவிட்டுள்ளார்.

தீ.பரத்குமார்

நாமக்கல்

குழந்தைகள் விற்பனை செய்து வந்த அமுதா என்பவரிடம் நேற்று முதல் நடத்திய விசாரணையில் இதுவரை மூன்று குழந்தைகளை மட்டுமே விற்பனை செய்ததும் அவற்றில் இரண்டு குழந்தைகள் கொல்லிமலையிலும் ஒரு குழந்தையை சேலத்திலும் விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதுதொடர்பாக தற்போது பத்து பேர் கொண்ட குழுக்கள் அமைத்து தேடிவருவதாகவும், அந்த குழுவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் அடங்கியுள்ளனர்.

மேலும் இரண்டு வருடத்தில் 2800 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் அந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை சரிப்பார்க்க 12 பேர் கொண்ட குழு அமைத்து சரிப்பார்க்கப்பட்டுவருகிறது.
இது குறித்து விசாரணையில் ஈரோட்டை சேர்ந்த பர்வின்  என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அமுதாவுடன் தொடர்பில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் என்பவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இரண்டு குழந்தைகளை கொல்லிமலையில் விற்பனை செய்யப்பட்டது‌ தெரியவந்தது. மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்  முருகேசனுடன் கொல்லிமலைக்கு விரைந்த போலிசார்கள் தற்போது அந்த இரண்டு குழந்தைகளை அடையாளம் காட்டும் பணி நடைப்பெற்று வருகின்றன.

மேலும் பர்வீன் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு ஒன்றும் தெரியாது. தன்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தான் பேசுவார்கள்.அவர்களிடம் நான் குழந்தையை ஒப்படைத்து விடுவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நான்கு குழந்தைகளை விற்பனை செய்தது வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலிசார் தரப்பில் இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என தெரியவருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.