ETV Bharat / bharat

ரக்சா பந்தன் பரிசு: 14 லட்சம் முகக்கவசங்களை மக்களுக்கு வழங்கிய காவல்துறை!

author img

By

Published : Aug 3, 2020, 9:17 PM IST

சகோதரர்கள் தின (ரக்சா பந்தன்) கொண்டாட்டத்தையொட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் 14 லட்சம் மக்களுக்கு அம்மாவட்ட காவல்துறையினர் முகக்கவசங்களை பரிசளித்துள்ளனர்.

Face mask  Raigarh police  Chhattisgarh news  Raksha Bandhan  Mask on Raksha Bandhan  சத்திஸ்கர்  முகக்கவசங்களை பரிசளித்த காவல்துறை
ரக்ஷா பந்தன் பரிசு: 14 லட்சம் முகக்கவசங்களை மக்களுக்கு வழங்கிய காவல்துறை

ரக்சா பந்தன் நாளை முன்னிட்டு சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டத்தில் 14 லட்சம் மக்களுக்கு காவல்துறையினர் முகக்கவசங்களை வழங்கினர். தன்னார்வலர்களுடன் இணைந்து, ராய்கர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் மூலம் மக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதலே ராய்கர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வுகளை அம்மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதால், மக்களின் பாதுகாப்புக்காக முகக்கவசங்கள் வழங்கப்பட்டதாக, அம்மாவட்ட எஸ்பி சந்தோஷ் சிங் கூறியுள்ளார். மேலும், ரக்சா பந்தன் (சகோதரர்கள் தினம்) கொண்டாட்டத்தின் அங்கமாக முகக்கவசங்களை மற்றவர்களுக்குப் பரிசளியுங்கள் என்றும் வலியுறுத்தினார்.

பந்தத்தைப் பலப்படுத்தும் நிகழ்வாக கொண்டாடப்படும் ரக்சா பந்தனையொட்டி மக்களுக்கு முகக்கவசங்களை வழங்கியிருக்கும் காவல்துறையினரின் செயல்பாடுகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2 கோடி கையாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.