சத்தீஸ்கர் மாநிலம் தாந்தேவாடா மாவட்டத்தில் பல்னர் கிராமத்தைச் சேர்ந்த மல்லா, 12 வயதில் வீட்டிலிருந்து வெளியேறி நக்சல் அமைப்பில் இணைந்துள்ளார். நீண்ட நாள்களாக குடும்பத்தினரை பார்க்காமல் தவித்து வந்த மல்லா, 14 ஆண்டுகளுக்கு பிறகு ரக்ஷா பந்தன் தினத்தில் சகோதரியை பார்க்க வந்துள்ளார்.
பின்னர், அங்கிருந்து புறப்பட முயன்ற சகோதரனை தடுத்த தங்கை, எப்போதும் உன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் எங்களுக்காக காவல் துறையில் சரணடைந்து விடு எனக் கேட்டுள்ளார். சகோதரியின் சொல்லை மறுக்க முடியாததால், அருகிலிருந்த காவல் துறையில் மல்லா சரணடைந்ததார்.
இது தொடர்பாக பேசிய தாந்தேவாடா காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவ், "மல்லா, பைரம்கர் பகுதியின் படைப்பிரிவு தளபதியாக இருந்த காலக்கட்டத்தில், காவல்துறையினரின் உயிரை கொன்ற அனைத்து முக்கிய சம்பவங்களிலும் பங்கு இருந்துள்ளது. இவர் தற்போது தாந்தேவாடா மாவட்டத்தின் லோன் வர்ராட்டு திட்டத்தின் கீழ் திரும்பியுள்ளார். லோன் வர்ராட்டு திட்டம் என்பது நாட்டின் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இடதுசாரி பயங்கரவாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தானாக சரணடையும் முயற்சியாகும்" என்றார்.