சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ரமன் சிங்கின் உதவியாளராக இருந்தவர் குப்தா. இவர் மீது சிறுமி ஒருவர் பாலியல் புகாரளித்திருந்தார்.
அந்தப் புகார் தொடர்பான விசாரணைக்காக, சிறுமி அவரது பெற்றோருடன் மார்ச் 4ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது முதல் அந்த சிறுமியையும் அவரது குடும்பத்தினரையும் காணவில்லை என்று சிறுமியின் மாமா தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை குப்தாவின் வீட்டில் அச்சிறுமி வேலை செய்துவந்துள்ளார். அப்போது, பல முறை அச்சிறுமியை குப்தா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். மேலும், இது தொடர்பாக வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.
இது குறித்து அச்சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், தொண்டு நிறுவனம் மூலம் காவல் துறையினருக்கு புகரளிக்கப்பட்டது. விசாரணையில் குப்தா அச்சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது உறுதியானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: கான்பூரில் மாடலிங் பெண் பாலியல் வன்புணர்வு