சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதையடுத்து இந்தத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும் பணி சேலம், தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்றது. இதை எதிர்த்து விவசாயிகள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கைப்பற்றப்பட்ட நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி புதிய சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு தடை விதித்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.