நவராத்திரி விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல மாநிலங்களில் தாண்டியா, கார்பா ஆகிய நடன விழாக்கள் நடத்தப்படுகின்றன. மத வேறுபாடுகளின்றி இந்த விழாவில் அனைவரும் கலந்துகொள்வது வழக்கம். ஆனால், இந்துக்கள் அல்லாதோர் இந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என பஜ்ரங் தல் அமைப்பு சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஊடக ஒருங்கிணைப்பாளர் கைலாஷ், "தாண்டியா, கார்பா ஆகிய நடன நிகழ்ச்சிகளுக்குள் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்காமல் இருக்க வருவோரின் ஆதார் அடையாளத்தை ஆராய வேண்டும். இந்த நிகழ்ச்சிகளின் காப்பாளர்களாக இந்துக்கள் அல்லாதோரை நியமிக்க வேண்டாம் எனவும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களை கேட்டு கொண்டுள்ளோம்.
இந்த நிகழ்ச்சிகளில் இந்துக்கள் அல்லாதோர் கலந்துகொண்டு பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வரும் இந்துக்களையும் அவர்கள் தாக்குகின்றனர். இனி, இதில் கலந்துகொள்ளும் பஜ்ரங் தல் அமைப்பினர் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.