சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 22-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று சந்திரயான் 2 விண்கலம் அதனுடைய ஐந்தாவது சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக மாற்றி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சந்திரயான் 2 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் இன்று பிற்பகல் தனியாக பிரிக்கப்படவுள்ளதை அடுத்து அதற்கான தற்போது தொடங்கியுள்ளன. முதலாவது வட்டப்பாதையில் விக்ரம் லேண்டர், நிலவிற்கு 120 கி.மீ தொலைவில் இருந்து 109 கி.மீ தொலைவிற்கு குறைக்கப்பட்டு நிலவினை சுற்றி வரும். அதனை தொடர்ந்து 4-ஆம் தேதி 36 கி.மீ தொலைவிற்கு குறைக்கப்படும். பின்னர் 7-ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்கிய நான்கு மணி நேரத்தில் பிரக்யான் கலம் நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்.