ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதவாரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ஆந்திரஆளுங்கட்சியான தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை கடுமையாக சாடியுள்ளார். அவர் பேசியதாவது,
ஆந்திர மாநில அரசு பெரிதாக மக்களுக்கு அளித்த வாக்கு உறுதியை செய்யவில்லை, சேவா மித்ரா என்னும் ஒரு செயலியை கொண்டுவந்து, மக்களுக்கு சேவை செய்வதாக கூறி, அவர்களின் தகவல்களை திருடிவருகிறது.
மேலும் சந்திரபாபு நாயுடு தன் குடும்பத்திற்கு அரசியல் மூலம் ஆதாயம் தேடிகொள்கிறார்.இதனால் பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் ஆந்திராவை சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து காப்பாற்ற முடியும். சந்திரபாபு ஆந்திராவின் பல்லால தேவா(பாகுபலி வில்லன்). இவ்வாறு அவர் விமர்சித்துப் பேசினார்.