ETV Bharat / bharat

"போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" - அமித் ஷா - அமித் ஷா பிம்ஸ்டெக் கருத்தரங்கம்

டெல்லி : போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

amit shah
amit shah
author img

By

Published : Feb 13, 2020, 5:47 PM IST

பிம்ஸ்டெக் நாடுகளில் பொதுப்பொருள் கடத்தலைத் தடுப்பு குறித்து, தலைநகர் டெல்லியில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அரசு போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பல்வேறு அமைப்புகளின் உதவியோடு அப்பிரச்னையை எதிர்கொள்ள புதியதாக சட்டம் இயற்றப்படவுள்ளது. இதுபோன்ற போதைப் பொருட்களை ஏற்றுமதி செய்யவோ, இறக்குமதி செய்யவோ நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

உலகம் முழுவதும் 15-64 வயதுக்குட்பட்டவர்களில் 5.5 விழுக்காடு பேர் போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாக, உலக போதைப் பொருள் அறிக்கை சொல்கிறது. அப்படியானால், 27 கோடிக்கும் அதிமானோர் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். 2010ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 21 கோடியாக இருந்தது. இந்த அதிவேக வளர்ச்சி கவலை அளிப்பதாகிறது.

சமூக விரோதிகள், பயங்கரவாதிகளுக்கு இதுதான் பிரதான வருமானம். நம் பன்னாட்டு திறன்களை ஒன்றுதிரட்டி பயங்கரவாதத்தையும், போதைப் பொருட்களையும் எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க : அட்டகாசமாக ஆம் ஆத்மியை வாழ்த்திய அமுல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.