ETV Bharat / bharat

மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன்- ப.சிதம்பரம்

டெல்லி: மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் ரயில் சேவைகளைத் தொடங்கும் மத்திய அரசின் முடிவை வரவேற்கிறேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Centre should start road, air transport as well: P Chidambaram

author img

By

Published : May 11, 2020, 1:56 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள சில தளர்வுகளை வரவேற்பதாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், மாநிலங்களுக்கு இடையே பயணிகள் ரயில்களைத் தொடங்கும் மத்திய அரசின் முடிவை வரவேற்கிறேன். இதே போன்று பேருந்து, விமானப் போக்குவரத்தையும் தொடங்கவேண்டும் என்றார்.

மேலும், பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகளை உண்மையிலேயே தொடங்க வேண்டுமென்றால், பேருந்து, ரயில் மற்றும் விமானம் வாயிலாகப் பயணிகள் போக்குவரத்து மிகவும் அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • மாநிலங்களுக்கு இடையே பயணிகள் ரயில்களைத் தொடங்கும் முடிவை வரவேற்கிறேன். இதே போன்று பஸ், விமானப் போக்குவரத்தையும் தொடங்கவேண்டும்.

    பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் உண்மையிலேயே தொடங்க வேண்டுமென்றால், பஸ், ரயில் மற்றும் விமானம் வாயிலாகப் பயணிகள் போக்குவரத்து மிக அவசியம்.

    — P. Chidambaram (@PChidambaram_IN) May 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக, மே 12ஆம் தேதி முதல் குளிர்சாதன வசதி கொண்ட ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களை இயக்கவுள்ளதாக ரயில்வே இயக்க அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பயணிகள் ரயில் 12ஆம் தேதி முதல் இயங்கும்: ரயில்வே அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.