ETV Bharat / bharat

'ஊரடங்கும் முக்கியம்... வீடுகளுக்குச் செல்லமுடியாமல் தவிக்கும் தொழிலாளர்களும் முக்கியம்' - மாயாவதி - தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் அதே வேளையில், ஊர் திரும்ப வழியற்றுத்தவித்து வரும் தொழிலாளர்கள் வீடுகளுக்குத் திரும்ப மத்திய அரசு, உதவ வேண்டும் என பகுஜன் சமாஜ்வாதியின் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

மாயாவதி
மாயாவதி
author img

By

Published : Apr 22, 2020, 6:42 PM IST

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தங்குவதை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பல்வேறு வட மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் பலர் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் கும்பல் கும்பலாய் உணவு, உறைவிடம், உறக்கமற்றுத் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிய வண்ணம் உள்ளனர்.

  • 1.कोरोना प्रकोप के कारण लगे देशव्यापी लाॅकडाउन से सर्वाधिक महाराष्ट्र, दिल्ली, हरियाणा तथा अन्य और राज्यों में भी लाखों गरीब व मजदूर प्रवासी लोग बेरोजगारी व भुखमरी की मार झेल रहे हैं। उन्हें एक वक्त का भोजन भी सही से नहीं मिल रहा है तथा वे हर हाल में अपने घर वापस लौटना चाहते हैं।

    — Mayawati (@Mayawati) April 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தற்போது இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, 'கரோனா ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாமல், தவித்து வருகின்றனர். வேலை இழந்து பசியால் வாடி, பல இன்னல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.

  • 2. ऐसे में केन्द्र सरकार से आग्रह है कि वह उनकी इस मांँग पर सहानुभूतिपूर्वक विचार करके तथा लाॅकडाउन के नियमों का भी सही से पालन करते हुए उन्हें विशेष ट्रेनों व बसों आदि से उनके घरों तक भेजने की व्यवस्था कराये जैसाकि कोटा से छात्रों को भेजने हेतु किया गया है।

வீடுகள் இன்றி, ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுகூட கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். கருணை அடிப்படையில் மத்திய அரசு, இவர்களின் குரலுக்கு செவி சாய்த்து, ஊர் திரும்ப உதவ வேண்டும். ஊரடங்கைப் பேண வேண்டிய அதே வேளையில், சிறப்புப் பேருந்துகள் அல்லது ரயில்களை இயக்கி, அவர்களை வீடு சேர்க்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் இஸ்லாமியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.