பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
புலிகள், யானைகள் போன்ற விலங்கு இனங்கள் புத்துயிர் பெறுவதற்கான ஒரு தடமாக இந்தியா மாறியுள்ளது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
இந்தியாவில் புலிகள், யானைகள் இரண்டையும் வேட்டையாடுவதற்கான அச்சுறுத்தலை எதிர்கொள்ள மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.
பல்லுயிர் பெருக்கத்தில் மிகவும் வளமான மாநிலங்களில் ஒன்றான ஒடிசா இந்த பாதுகாப்பு முயற்சிகளின் நேரடி தாக்கத்தை கண்டிருக்கிறது. புலி, யானை பாதுகாப்புத் திட்டம் ஆகியவை வேட்டையாடும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. மேலும் இந்த கம்பீரமான உயிரினங்கள் அவற்றின் இயற்கை வாழ்விடங்களில் வளர வழிவகை செய்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெகுவாகப் பாராட்டினார்
பல்லுயிர்த்தன்மை நிறைந்த ஒடிசா மாநிலத்தில், இந்த பாதுகாப்பு முயற்சிகளின் நேரடி தாக்கத்தை கண்டுள்ளது.
புலி, யானைப் பாதுகாப்பிற்கான மத்திய நிதியுதவித் திட்டங்களின் கீழ் 2019-21ஆம் ஆண்டிற்கு இடையில் ரூ.35 கோடிக்கு மேல் ஒடிசாவிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் புலிகளின் வாழ்க்கையை வளமாக்குவதை உறுதிசெய்கின்றன" என்று தெரிவித்தார்.