ETV Bharat / bharat

'குட் பட் லேட்'- விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசை விளாசிய அசோக் கெலாட்! - அசோக் கெலாட்

இந்தியாவில் உள்ள விவசாயிகள் பிரச்னை தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கவலை தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இவ்விவகாரத்தில் கவனம் செலுத்துகிறார். இது குட் (நல்லது) என்ற போதிலும் ரொம்ப லேட் (தாமதமானது) என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.

Farmers Protest  Canadian Prime Minister Justin Trudeau  Canada expressed concern over farmers protest  Prime Minister Narendra Modi  Rajasthan  Jaipur  Rajasthan CM Ashok Gehlot  விவசாயிகள் பிரச்னை  விவசாயிகள்  ஜஸ்டின் ட்ரூடோ  நரேந்திர மோடி  அசோக் கெலாட்  farmer

author img

By

Published : Dec 1, 2020, 10:01 PM IST

Updated : Dec 1, 2020, 10:22 PM IST

ஜெய்ப்பூர்: விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களிடம் பேச மத்திய அரசு முனைந்துள்ள நல்ல விஷயம் என்றாலும் தாமதமானது என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

இது குறித்து அசோக் கெலாட் ட்விட்டரில், “நம் நாட்டில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

விவசாயிகள் பிரச்னையை பிரதமர் நரேந்திர மோடி தீர்க்க வேண்டும். விவசாயிகளின் உண்மையான கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

மற்றொரு பதிவில், “கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். அமைதியான போராட்டத்தின் உரிமையைப் பாதுகாக்க கனடா எப்போதும் துணை இருக்கும் என்று ட்ரூடோ கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜஸ்டின் ட்ரூடோவின் பேச்சுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: “வேளாண் சட்டங்களை மாற்றியமைத்திடுக”- அசோக் கெலாட் பிரமருக்கு கடிதம்!

Last Updated : Dec 1, 2020, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.