அஸ்ஸாம், டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், தாதர் மற்றும் நாகர் ஹவேலி, லடாக், தமிழ்நாடு, சண்டிகர், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கரோனா தடுப்பூசி விநியோகத்தை தீவிரப்படுத்தும்படி அம்மாநில அரசை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது. இந்த 12 மாநிலங்களிலும், 40 விழுக்காட்டிற்கும் குறைவாகவே சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன,
கடந்த ஜனவரி 16ஆம் தேதி, தடுப்பூசி போடும் பணி தொடங்கியதிலிருந்தே, பிகார், மத்தியப் பிரதேசம், திரிபுரா, உத்தரகண்ட், மிசோரம், லட்சத்தீவு, உத்தரப் பிரதேசம், கேரளா, ஒடிசா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 60 விழுக்காட்டிற்கும் மேலான சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 5ஆம் தேதி முதல், காவல்துறையினர் உள்பட இரண்டு கோடி கரோனா முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மார்ச் மாதல் முதல், பல்வேறு விதமான நோய்களால் சிக்கி தவிக்கும் 50 வயதுக்கு மேலான 27 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இன்று காலை வரை, சுகாதார ஊழியர்கள், கரோனா முன்கள பணியாளர்கள் என 58 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.