ETV Bharat / bharat

அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் - மாஸ் காட்டும் மம்தா - மம்தா பானர்ஜி

டெல்லி: மேற்குவங்கத்தில் பொறுப்பில் இருக்கும் மூன்று ஐபிஎஸ் அலுவலர்களை மத்திய பணிகளுக்காக உடனடியாக விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா
மம்தா
author img

By

Published : Dec 17, 2020, 6:14 PM IST

மேற்கு வங்கத்தில் பொறுப்பில் இருக்கும் மூன்று ஐபிஎஸ் அலுவலர்களை மத்திய பணிகளுக்காக விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அவர்களை விடுவிக்க அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஏற்கனவே புதிய பணி அளிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே மூன்று ஐபிஎஸ் அலுவலர்களை உடனடியாக விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தின் நகல் மேற்குவங்கத்தின் டிஐிபிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

'மத்திய அரசுக்கு அதிக அதிகாரம்'

இதுகுறித்து மேற்கு வங்க தலைமை செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய அறிக்கையில், "ஐபிஎஸ் சட்டத்தின்படி, சர்ச்சை எழும்பட்சத்தில், மத்திய அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது. மூன்று ஐபிஎஸ் அலுவலர்களுக்கு மத்திய அரசில் ஏற்கனவே புதிய பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் காவல் துறை கண்காணிப்பாளராக போலாநாத் பாண்டேவும் சாஸ்த்ரா சீமா பால் என்ற ஆயுத எல்லை படையின் காவல் துறை துணை இயக்குநராக பிரவீன் திரிபாதியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை காவல் துறை இயக்குநராக ராஜீவ் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

  • GoI’s order of central deputation for the 3 serving IPS officers of West Bengal despite the State’s objection is a colourable exercise of power and blatant misuse of emergency provision of IPS Cadre Rule 1954. (1/3)

    — Mamata Banerjee (@MamataOfficial) December 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம்

இதனை கடுமையாக விமர்சித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "ஜனநாயகத்திற்கு விரோதமான ஆதிக்க சக்திக்கு முன்னே அடிபணிய மாட்டோம். ஐபிஎஸ் அலுவலர்களை அனுப்ப மாநில அரசு மறுத்த பின்பும் மத்திய அரசு விதித்த கெடுபிடியானது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையே இது காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.