புதுச்சேரி, ஜீவானந்தபுரத்தில் வசிக்கும் திருமலை என்பவரின் மகள் செல்வி. 22 வயதான இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒன்பது மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
தாய் வீட்டிற்கு ஒருவார காலத்திற்கு தங்கவந்த இவர் 17ஆம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டின் இரண்டாவது மாடிக்குச் சென்று தனது கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அதனால் செல்வியின் தலையில் பலமாக அடிபட்டு மயக்கமடைந்தார். படுகாயங்களுடன் மயக்க நிலையிலிருந்த செல்வியை மீட்ட பெற்றோர் அவரை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனளிக்காததால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிகழ்வு அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் பணநிரப்பக் கொண்டு சென்ற ரூ.52 லட்சம் அபேஸ்!