ETV Bharat / bharat

கூலிப்படையை ஏவி இளைஞர் மீது தாக்குதல் - அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்! - புதுச்சேரி தற்போதைய செய்தி

புதுச்சேரி: இளைஞர் மீது கூலிப்படையினர் நடத்திய கொடூர தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CCTV footage of Youth attacked by Unknown mob

author img

By

Published : Jul 6, 2020, 5:17 PM IST

புதுச்சேரி கனகசெட்டிகுளம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜபருல்லா(40). கடந்த மாதம் இவரை நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று, பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காலாபட்டு காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஜபருல்லா வீட்டின் அருகே வசிக்கும் டாக்டர் குமார் என்பவர் கூலிப்படை அனுப்பி, ஜபருல்லாவை கொடூரமாகத் தாக்கியது தெரியவந்தது.

கூலிப்படையை ஏவி இளைஞர் மீது தாக்குதல்

இதையடுத்து டாக்டர் குமார், அவரது ஆதரவாளர்கள் கோபி, நரேஷ்குமார் ஆகியோரை காலாப்பட்டு காவல் துறையினர் கடந்த 15 நாள்களுக்கு முன் கைது செய்தனர். குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் சமீபத்தில்தான் பிணை கிடைத்தது.

இந்நிலையில், தற்போது இந்த தாக்குதல் தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கேரளாவில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.