டெல்லியை சேர்ந்த க்வாலிட்டி என்ற தனியார் பால் பொருள் நிறுவனம் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஐடிபிஐ வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, தனலக்ஷ்மி வங்கி, சிண்டிகேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் சுமார் ரூ.1,400 கோடி முறைகேடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் சஞ்சய் திரங்கா, சித்தாந்த் குப்தா, அருண் ஸ்ரீவத்சவா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, தற்போது ரெய்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
டெல்லி, சஹ்ரான்பூர், அஜ்மீர், பல்வால் உள்ளிட்ட இடங்களில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரிக்கும் முயற்சியிலும் சிபிஐ களமிறங்கியுள்ளது.
இதையும் படிங்க: நக்சல்களால் பொதுமக்களுக்கே அதிக பாதிப்பு: மத்திய உள் துறை அமைச்சகம்