ETV Bharat / bharat

பாஜக ஆட்சியில் பெட்டி கடையாக மாறிய சிபிஐ- மகாராஷ்டிரா அமைச்சர்

மும்பை: சிபிஐ விசாரணைக்கு விசாரிக்க சம்மந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதல் கட்டாயம்  என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக மகாராஷ்டிரா அமைச்சர் அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார்.

  பாஜக ஆட்சியில் பெட்டி கடையாக மாறிய சிபிஐ- மகாராஷ்டிரா அமைச்சர்
பாஜக ஆட்சியில் பெட்டி கடையாக மாறிய சிபிஐ- மகாராஷ்டிரா அமைச்சர்
author img

By

Published : Nov 20, 2020, 8:51 PM IST

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா அமைச்சர் அஸ்லாம் ஷேக், “ பாஜக அரசாங்கத்தின் கீழ், சிபிஐ ஒரு பெட்டிகடை போல மாறிவிட்டது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துவந்தது. சிபிஐ விசாரணைக்கு சம்மந்தப்பட்ட மாநிலத்தின் அனுமதி வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்.

மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணைக்கு மாநில அரசின் ஒப்புதல் கட்டாயமானது என்றும், மாநிலங்களின் அனுமதியின்றி எந்தவொரு மாநிலத்திற்கும் சிபிஐயின் அதிகார வரம்பை மத்திய அரசு நீட்டிக்க முடியாது என்றும் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உத்தரபிரதேசத்தில் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனுக்களை விசாரித்த நீதிபதி ஏ. எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு, மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ விசாரணை நடத்த முடியாது என்று தீர்ப்பளித்தது. அண்மையில் பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் ஒப்புதல் பெறாமல் சிபிஐ விசாரணை மேற்கொள்ளக்கூடாது என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.