கடந்த 10 வருடங்களாக சித்ரகூட், பண்டா, ஹமிர்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 முதல் 16 வயது வரையிலான சிறுமிகளை வற்புறுத்தி இக்கொடூரமான செயலை அரங்கேற்றியுள்ளார்.
மேலும் பொம்மைகள், செல்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்களை சிறுமிகளிடம் கொடுத்து அவர்களிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல் சிறுமிகளைத் தவறாக வீடியோ எடுத்து அதனை இணையத்திலும் விற்பனை செய்துவந்திருக்கிறார்.
இதுகுறித்த ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சிபிஐ அதிரடியாக பொறியாளரைக் கைதுசெய்து, அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளது. சோதனையில் 8 லட்சம் ரூபாய் பணம், லேப்டாப், பாலியல் பொம்மைகள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியுள்ளது.
இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் எனக் கூறப்படுகிறது.